வெட்டவெளி இருப்பிடம் (Vettaveli Iruppidam)

இறைவனின் தன்மை (Nature of God)

வெட்டவெளி சற்குரு அருளுரை

இறைவனின் தன்மை — நீல வண்ணப் பேரொளி. பிரபஞ்ச இயக்கமும் பதஞ்சலி மகரிஷியின் ஆன்ம ஆற்றலும்.

இறைவனின் தன்மை | பிப்ரவரி 9, 2025 | திருவண்ணாமலை

இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு அதன் பெயர் கருந்துளை (Black Hole). உலகம் உருவான பிறகு அதன் பெயர் நீல வண்ணப் பேரொளி.

அந்த நீல வண்ணப் பேரொளியே யோகத்தின் தந்தை பதஞ்சலி மகரிஷி. உலகம் என்பது பதஞ்சலியின் கதை; பதஞ்சலியின் பேராற்றலால் உலகம் உருவானது. பதஞ்சலி என்பது ஒரு பெயரோ மனித உருவமோ அல்ல; மனித கண்களால் பார்க்க முடியாத ஒரு பேராற்றல். அதன் உண்மை நிலை உருவமற்றது, ஆனால் எந்த உருவத்தையும் அது எடுக்க வல்லது. அதன் மூல நிலை ஒன்...